deepamnews
இலங்கை

செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை!

சிவபூமி அறக்கட்டளையினால், செம்மணி பகுதியில் “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் ஏழு அடி உயரமான சிவலிங்கம் இன்றைய தினம் (புதன்கிழமை) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும்.

அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக சிவ பூமி அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.

Related posts

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை

videodeepam

ஒரு இலட்சம் குரங்குகள் சீனாவிற்கு வழங்க திட்டம் – சீன பிரதிநிதிகள் விவசாய அமைச்சிடம் கோரிக்கை

videodeepam

வவுனியாவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

videodeepam