deepamnews
இலங்கை

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யும் 21 ஆம் திருத்தத்தை கொண்டுவாருங்கள் – சஜித் 

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதில் அரசாங்கத்துக்குள் இணக்கம் இல்லை என்றால் நாங்கள் சமர்ப்பித்திருக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யும் 21 ஆம் திருத்தத்தை கொண்டுவாருங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை நாளை வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இது தொடர்பாக ஆளும் கட்சி கூட்டத்தின் போது, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதனால் வியாழக்கிமைமைக்கு 22 ஆம் திருத்தத்தை கொண்டுவர அரசாங்கத்தில் இணப்பாடு இல்லை என்றால், நாங்கள் கொண்டுவந்திருக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் 21ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவர நாங்கள் பிரேரிக்கின்றோம். அதற்காக எமது பூரண ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கின்றோம்.

ஏனெனில் அரசாங்கத்துக்குள் இதுதொடர்பாக ஏற்பட்டிருக்கும் முரண்பாடு காரணமாக 22ஆம் திருத்தம் தயாரிக்கப்பட்டதுபோல் கொண்டுவராது என தெரிவிக்கப்படுகின்றது. இதன் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்றார்.

அதற்கு சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளிக்கையில், கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய வியாழக்கிமை அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம். இரண்டு தினங்கள் விவாதம் இடம்பெறும். இதன்போது திருத்தங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் நீதி அமைச்சர் கலந்துரையாடி தீர்த்துக்கொள்வார் என்றார்.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

videodeepam

கோட்டாபயவின் பாதையில் செல்லும் தற்போதைய அரசாங்கம் –  சம்பிக்க குற்றச்சாட்டு

videodeepam

கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிக கழகம் பூரண ஆதரவு

videodeepam