deepamnews
இலங்கை

மன்னார் இரணை இலுப்பை குளத்தில் இஞ்சி அறுவடை விழா

மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட தோட்டச் செய்கை இன் உற்பத்திப் பொருட்களின் அறுவடை நிகழ்வு நேற்று(4) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன் போது மன்னார் இரணை இலுப்பை குளத்தில் இஞ்சி அறுவடை விழா நடைபெற்றது.

பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார்.

மேலும் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் (விரி) எஸ். உதயச்சந்திரன், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் க. மகேந்திரன், மன்னார் மாவட்ட செயலக பிரதான கலாச்சார உத்தியோகத்தர் நித்தியானந்தன் ஆகியோரும் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இரணை இலுப்பை குளத்தைச் சேர்ந்த விவசாயிக்கு விவசாய திணைக்களம் வழங்கிய தூவல் நீர் பாசன உபகரணம் தொகுதியின் உதவியுடன் விவசாய திணைக்களத்தின் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.

மேலும் வெங்காயம்,பூசணிக்காய் ,கச்சான் கடலை,மிளகாய் உள்ளிட்டவையும் அறுவடை செய்யப்பட்டது.

Related posts

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்த எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை  – பிரதமர் தினேஷ் குணவர்தன

videodeepam

இலங்கையில் முதலீடு செய்ய தயாராகின்றது அதானி குழுமம்?

videodeepam

வங்காள விரிகுடாவில் ‘மண்டோஸ்’ சூறாவளி மையம் – நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய மழை  

videodeepam