நாட்டில் நிலவும் குளிருடனான வானிலை படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், தென்மேற்கு பிராந்தியங்களில் குளிருடனான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவான Mandous புயல் நேற்று முன்தினம் தமிழகத்தின் கரையைக் கடந்தது.
எவ்வாறாயினும், புயல் தாக்கத்தினால் நாட்டில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் இந்த பகுதிகளில் குளிருடனான வானிலை நிலவும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.