deepamnews
இலங்கை

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 45லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் இன்று (21) கைப்பற்றியுள்ளனர்.

தூத்துக்குடி புல்லாவெளி கடற்கரையில் இன்று புதன் கிழமை (21)அதிகாலை 4 மணியளவில், க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி,வேல்ராஜ் தலைமை காவலர் ராமர் ,இருதயராஜ், இசக்கி,காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கடற்கரையில் நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனையிட்டனர்.

அதில், சுமார் 1½ டன் எடையுள்ள பீடி இலைகள் இருந்தது.இதையடுத்து மினி லாரி மற்றும் பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இலங்கையில் அதன் மதிப்பு 45 லட்சம் ஆகும்.

அதன் காரணமாக பீடி இலைகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது. இந்த பீடி இலைகளை சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

இலங்கைக்கு செல்லமாட்டோம் என வியட்நாமிலுள்ள இலங்கை அகதிகள் தெரிவிப்பு – இருவர் தற்கொலைக்கு முயற்சி

videodeepam

இலங்கையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்த மதுபானங்களின் விற்பனை

videodeepam

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

videodeepam