deepamnews
இலங்கை

புலம்பெயர் இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை பெறுவதற்கான அலுவலகத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்வதற்கான மத்திய ஒருங்கிணைப்பு அலுவலகமொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2022 இடைக்கால வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் 03 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் வகையில் இந்த புதிய அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகரத்திற்காக 03 புதிய வகை விசாக்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

ஒன்றரை ரில்லியன் வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசிப்பு –  அநுரகுமார குற்றச்சாட்டு

videodeepam

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலன்று வெளியாகும் ஆதாரங்கள் – பிரித்தானிய தமிழர் பேரவை அறிவிப்பு

videodeepam

தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி!

videodeepam