deepamnews
இலங்கைசர்வதேசம்

மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவராக மஹிந்த சமரசிங்க நற்சான்றிதழ் கையளிப்பு

மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவராக மஹிந்த சமரசிங்க தனது நற்சான்றிதழின் நகல்களை அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ தூதுவரிடம் சமர்ப்பித்துள்ளார்.

19ஆம் தேதி வாஷிங்டன் டி.சி. மெக்சிகோ கலாசார நிலையத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது தூதுவர் மஹிந்த சமரசிங்க இந்த நற்சான்றிதழ்களை வழங்கினார்.

நற்சான்றிதழ்களை சமர்ப்பித்ததன் பின்னர் இடம்பெற்ற சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலனுக்காக இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் உறவுகளை உயர் மட்டத்திற்கு கொண்டு வர கடுமையாக உழைக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது இலங்கையுடன் சாதகமான வர்த்தக சமநிலையுடன் இலங்கை தயாரிப்புகளுக்கான 15வது ஏற்றுமதி இடமாக மெக்சிகோ மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் அது தொடர்பான போக்குகள் குறித்து விளக்கிய திரு.மகிந்த சமரசிங்க, மெக்சிகோ உள்ளிட்ட நம்பகமான இருதரப்பு மற்றும் சர்வதேச பங்காளிகளின் ஆதரவுடன் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் மெக்சிகோ அங்கத்துவம் பெற்றுள்ளதால், இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான அண்மைய முன்னேற்றங்கள் மற்றும் இலங்கையில் நல்லிணக்கத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தூதுவர் தனது நண்பருக்கு அறிவித்துள்ளார்.

தூதுவர் சமரசிங்க மெக்சிகோ ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கான உத்தியோகபூர்வ வைபவமொன்று விரைவில் தயாராகவுள்ளதாக தூதுவர் Esteban Moctezuma தெரிவித்துள்ளார்.

இதனிடையே மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவராக தூதுவர் மஹிந்த சமரசிங்க சுதந்திரமாக தனது கடமைகளை மேற்கொள்ள முடியும்.

வலுவான விநியோகச் சங்கிலியைக் கொண்ட மெக்சிகோ, அமெரிக்காவுடனும், பிராந்தியத்தில் உள்ள பல முக்கிய பொருளாதாரங்களுடனும் வலுவான பொருளாதாரப் பங்காளித்துவத்தைப் பேணுவதாகத் தெரிவித்த அவர், பிராந்தியத்தில் தனது இருப்பை விரிவுபடுத்துவதற்கு மெக்சிகோவின் இருதரப்பு மற்றும் பலதரப்பு வர்த்தகப் பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு!

videodeepam

ரஷ்யப் படைகளுக்கு எதிராக எதிர்த் தாக்குதல் நடத்த தயாராகும் யுக்ரைன்!

videodeepam

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்ட மகிந்த ராஜபக்ச

videodeepam