இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட ஏதாவதொரு நாட்டின் மத்தியஸ்த்தம் இன்றி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அது வெறுமனே காலத்தை கடத்தும் செயல்பாடு என அவர் மன்னாரில் நேற்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
தீர்வு விடயத்தில் முதலில் தமிழ் கட்சிகள், தங்களுக்கு இடையில் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.