deepamnews
இலங்கை

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான அரசின் தீர்மானம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை

மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

பிரஜைகளுக்கு வாழ்வதற்கு காணப்படும் உரிமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளமையை கருத்தில்கொண்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றமை தொடர்பில் ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்தி அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செயலாளர் மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதுடன், தேவைப்படும் பட்சத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடமும் விடயங்களை கேட்டறிய எதிர்பார்ப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

மிக விரைவாக விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கையை வௌியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கான கடன் சலுகைக்காலத்தை நீடித்தது இந்தியா:  ஒரு வருட அவகாசம் வழங்கியது

videodeepam

பிரதமர் பதவி யாருக்கு – தீவிரமடையும் மோதல்

videodeepam

தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – நடிகை தமிதா அபேரத்ன அறிவிப்பு

videodeepam