யாழ். தென்மராட்சி மட்டுவிலிலுள்ள ஆலயமொன்றில் வழிபாட்டில் ஈடுபட்ட நபர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றது.
மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த 52 வயதான தர்மலிங்கம் கேசவநாதன் என்பவரே இவ்வாறு ஆலயத்தில் மயங்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.