இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இந்த விஜயத்திற்கான இறுதி திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர், ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் செய்வது இதுவே முதல்முறையாகும்.
இந்தியா ஏற்கனவே 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை கடன்கள், கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் மற்றும் நாணய மாற்று ஏற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்தநிலையில் புதுவருடத்தில் இந்தியாவிலிருந்து வரும் முதல் உயர்மட்ட வருகையாக ஜெய்சங்கரின் வருகை அமைந்துள்ளது.