deepamnews
இலங்கை

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய உப தலைவராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பதவியில் இருந்து விலக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் நாளைய தினம் (சனிக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மத்திய குழு கூட்டத்தின் போது பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு உட்பட ஏனைய மாவட்டங்களில் இளைஞர் சமுதாயத்துடன் ஒன்றித்து செயற்பட கூடிய ஒரு இளம் சிரேஷ்ட உப தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆகவே தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நியமிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாவனையாளர் அலுவல்கள் உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகிறார்களா? – அரச அதிபர் கண்காணிக்க வேண்டும்.

videodeepam

சீமெந்தின் விலையில் மாற்றம்

videodeepam

எக்ஸ்பிரஸ் பேர்ல் நஷ்ட ஈடு: அறிக்கை தயாரிக்கப்படவில்லை என்கிறது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை.

videodeepam