deepamnews
இலங்கை

யாழில் பொலிஸார் எனக் கூறி வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள்!

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் பொலிஸார் எனக் கூறி வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த மூதாட்டியின் ஒரு பவுண் தங்கச் சங்கிலியை கத்தி முனையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த மூதாட்டியின் கணவர், பிள்ளைகள் வெளியில் சென்ற சமயம் மூதாட்டி மாத்திரம் வீட்டில் இருந்துள்ளார்.

அந்நேரம் தம்மை பொலிஸார் எனக் கூறி வீட்டினுள் நுழைந்த மூவரடங்கிய குழு ஒன்று மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து , அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூவரடங்கிய கொள்ளை கும்பல் தொடர்பில் சிசிரிவி பதிவுகள் தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை அரசாங்கம் ஒடுக்குகின்றது : சஜித் பிரேமதாச

videodeepam

சமஷ்டி’ தீர்வே எமக்கு வேண்டும்   – நல்லூர் கிட்டு பூங்காவில் திரண்ட மக்கள்.

videodeepam

செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை!

videodeepam