deepamnews
இலங்கை

தமிழர்பிரச்சினைக்கு உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தீர்வு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தீர்வு காண்பது தொடர்பாக, அடுத்த மாதம் தானும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் புலம்பெயர் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக நீதி மற்றும் அரசியல் சீர்திருத்த அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக அரசாங்கம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

ர்வதேச தலையீடு இன்றி உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த மாதம் நானும் ஜனாதிபதியும் இணைந்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

பேச்சுவார்த்தை வெற்றியடையும் பட்சத்தில், இலங்கையில் சர்வதேச தலையீடு இருக்காது.

சர்வதேச பொறிமுறையின் ஊடாக சர்வதேச அமைப்புகளின் மேற்பார்வையில் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்பார்ப்பாகும்.

எவ்வாறாயினும், இலங்கையே தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால் உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிந்தால், சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்கும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, அரசாங்கம் மிகுந்த அக்கறையுடன் செயற்படுகிறது.

இது தொடர்பாக நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளது.

அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் காதலியை நீதிமன்றத்தில் வைத்து அறைந்தவருக்கு விளக்கமறியல்.

videodeepam

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு – பதவிக்காலத்தை நீடிக்க திட்டம்

videodeepam

முல்லைத்தீவில் இ.போ.ச பேருந்து சாரதி மீது தாக்குதல்.

videodeepam