deepamnews
இலங்கை

அரசுக்கு  எதிரான மற்றொரு பாரிய போராட்டத்துக்கு தயாராகும் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள்

அரசாங்கத்துக்கு எதிரான மற்றொரு பாரிய போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் தயாராகி வருகின்றன.

பொதுமக்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில்  பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் நேற்றுக் கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும், கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

Related posts

தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்துக்களுக்கான நஷ்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொடுக்க விசேட நடவடிக்கை

videodeepam

ஜெனிவாவில் நாளை சமர்ப்பிக்கப்படுகிறது இலங்கை மீதான தீர்மானம்

videodeepam

தேர்தலுக்கான பணம் இதுவரை கிடைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam