deepamnews
இலங்கை

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு மைத்ரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என்கிறார் சந்திரிக்கா

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் இடம்பெற்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 124ஆவது ஜனன தின நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

அதற்கான பொறுப்பும் அவருடையதாகும்.

நான் அதிகாரத்தில் இருந்த போதும் அவ்வாறே செயற்பட்டேன்.

அந்தவகையில், ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்ற போது, தலைமை பொறுப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய கடமை உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை

videodeepam

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

videodeepam

நாட்டில் போசாக்கு குறைபாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளது – சுகாதார அமைச்சு

videodeepam