deepamnews
இலங்கை

ரணில் தோல்வியுற்றவர்  – தன்னையே வெளிநாட்டவர்கள் அதிகம் நம்புகின்றனர் என்கிறார் சஜித்

வெளிநாட்டு உதவிகளை பெறுவதற்கு சிறந்த நபர் யார் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனடறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ரணில் தோல்வியுற்றுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வழங்குநர்கள் ஏனையவர்களை விட தம்மை அதிகமாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நுகேகொடை – மஹாமயா மகளிர் கல்லூரிக்கு பேருந்து ஒன்றை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

”தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், வெளிநாட்டு வழங்குநர்களை சுமுகமான முறையில் கையாள்வதன் மூலம் அவர்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற முடிந்தது.

நான் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாது என்று சிலர் கூறுகிறார்கள். வெளிநாட்டு வழங்குநர்களின் நன்மதிப்பை வென்றிட சில வார்த்தைகளை பயன்படுத்துகிறேன்”.

வெளிநாட்டு வழங்குநர்களின் நன்மதிப்பை வென்று அதன்மூலம் பாடசாலை மாணவர்களுக்காக வளர்ப்பு பெற்றோர் திட்டத்தை இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்த திட்டத்தை அனைத்து தேசிய பாடசாலைகளிலும், செயல்படுத்துவேன். எதிர்காலத்தில் பாடசாலை செல்லும் ஒவ்வொரு பிள்ளையும் கணினியை சொந்தமாக வைத்திருப்பதையும் நான் காண்பேன்” என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வெளிநாட்டு உதவிகளை பெறுவதற்கு சிறந்த நபர் யார் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். தற்போதைய ஜனாதிபதி நாட்டிற்கு வெளிநாட்டு உதவிகளை கொண்டு வருவார் என்று அனைவரும் நினைத்தார்கள், ஆனால் அவர் தோல்வியுற்றவர் என்பதை நிரூபித்துள்ளார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வழமைக்கு திரும்பியது WhatsApp

videodeepam

கைதிகள் குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அரச மன்னிப்பு

videodeepam

இலங்கை சர்வதேசத்திடம் யாசகம் கேட்க ஊழல் மோசடிகளே காரணம் – பேராயர் தெரிவிப்பு

videodeepam