deepamnews
இலங்கை

தமிழ் முற்போக்கு கூட்டணி, நாடளாவிய ரீதியில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது

தமிழ் முற்போக்கு கூட்டணி, நாடளாவிய ரீதியில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.

அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், அரசியல் சபைக்கூட்டத்தில் தேர்தல் தொடர்பான ஏனைய முக்கிய தீர்மானங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 5 மாவட்டங்களில் நேற்று வேட்புமனுவில் கைச்சாத்திட்டுள்ளது.

அம்பாறை, மாத்தளை, புத்தளம், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இன்றைய  தினம் கட்டுப்பணம் செலுத்தவுள்ளது.

Related posts

மக்கள் சரியான தலைமைகளை இனம் காண வேண்டும் – ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

videodeepam

இனவாதத்தை கையில் எடுக்கிறது ரணில், ராஜபக்ச அரசு – ஜே.வி.பி. சந்திரசேகரன் கவலை.

videodeepam

328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நேற்றையதினம் இரவு முதல் நீக்கம்!

videodeepam