deepamnews
இலங்கை

தனித்து போட்டியிடும்  தமிழரசுக் கட்சி – பங்காளிகளும் வேறு கூட்டணியில்

உத்தேச உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவதென்று தீர்மானித்துள்ளன.

இன்று கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழரசுக்கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கம், புளொட் என்ற தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஈபிஆர்எல்எப் என்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் கூட்டணி, துளசி தலைமையிலான ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்த கூட்டமைப்பை அமைக்கப்படவுள்ளது.

அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள பேச்சு நடத்தப்படும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Related posts

இறுதிக்கட்ட யுத்தத்தில் இரசாயனக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு

videodeepam

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயார் – ராஜித அறிவிப்பு

videodeepam

மதங்கள் ஒற்றுமையோடு செயற்பட வேண்டும் – சிறீதரன் எம்.பி வேண்டுகோள்

videodeepam