deepamnews
இலங்கை

ஜனவரி 15 ஆம் திகதி முதல் மின் கட்டணம் அதிகரிப்பு – மின்சார சபை அறிவிப்பு

அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம்  ஜனவரி  15  ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் தொடர்பிலான  தரவுகளை ஒரு மாதத்திற்குள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், பொறியியலாளர் ரோஹான் செனவிரத்ன  தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை வழங்கிய அனுமதியின் பிரகாரம், ஜனவரி 15 ஆம் திகதி முதல் வீட்டுப் பாவனை மின்சார அலகிற்கான நிலையான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம்,  0 -30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 120  ரூபாவிலிருந்து 400 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

31-60 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 240 ரூபாவிலிருந்து 550  ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

60-90 அலகுகளுக்கான நிலையான கட்டணமும் 90-180 அலகுகள் வரையான நிலையான கட்டணமும் முறையே 650 ரூபாவாகவும்  1500 ரூபாவாகவும் அமைந்துள்ளது.

 180  அலகுகளுக்கு மேல் 1500 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 2000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

videodeepam

நாட்டில் தொடரும் கடும் மழை – மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு.

videodeepam

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மன்னாரிற்கு விஜயம்!!

videodeepam