deepamnews
இலங்கை

தேர்தலுக்கான நிதி தடையின்றி வழங்கப்படும் – திறைசேரி அதிகாரிகள் தெரிவிப்பு

தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை தடங்கலின்றி பெற்றுக்கொடுக்க முடியும் என திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ள முடியாது என வெளியாகின்ற கருத்துகள் தொடர்பில்  திறைசேரி அதிகாரிகளை  அழைத்து தேர்தல்கள் ஆணைக்குழு வினவியுள்ளது.

தேர்தல் என்பது அரசியலமைப்பு சார்ந்த விடயம் என்பதால், அதற்கு தேவையான நிதி எவ்வித தடையும் இன்றி பெற்றுக்கொடுக்கப்படும் என இதன்போது திறைசேரி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை நிதி அதிகாரி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, தேர்தல் நடத்தாமல் இருப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மாத்திரமே இருப்பதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அனுராதபுரத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி உறுதி 

videodeepam

காற்றாலை மின் திட்டங்களின் திறனை அதிகரிக்க அதானி குழுமம் கோரிக்கை

videodeepam

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

videodeepam