deepamnews
இலங்கை

இலங்கைக்கு விமான சேவையை மீண்டும் தொடங்கும் இரண்டு நாடுகள் !

ரஷ்ய மற்றும் பிரான்ஸ் விமான சேவைகள் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முக்கிய விமானச் சேவைகளில் ஒன்றான ‘அஸூர் எயார்’ இன்று (3) முதல் விமான சேவையைத் தொடங்கும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு பிரான்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ‘எயார் பிரான்ஸ்’ நாளை (4) முதல் விமான சேவையைத் தொடங்கும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விமானங்கள் வாரந்தோறும் சேவையில் ஈடுபடும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமில்லாமல் பேண நாணய சபை தீர்மானம்

videodeepam

முட்டை விலையை அதிகரிக்க அனுமதி

videodeepam

தேர்தல் நடத்துவது தொடர்பாக எவரும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam