deepamnews
இலங்கை

வடக்கு, கிழக்கில் விகாரைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீக்க வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த மத ஸ்தலங்களின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

பௌத்த மத ஸ்தலங்களின் பாதுகாப்பையும் இருப்பையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் யுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மதத் தலங்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.

அவர்கள், பௌத்த பிக்குகளுக்கும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

எனவே அந்த இடங்களில் இருந்து பாதுகாப்புப் படையினரை அகற்றுவது அந்த இடங்களின் வளர்ச்சிக்கு இடையூறாக அமையும் என்று மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Related posts

முட்டை இறக்குமதிக்கான சுகாதார பரிந்துரைகள் கிடைக்கப்பெறவில்லை – அரச வணிக கூட்டுத்தாபனம் தெரிவிப்பு

videodeepam

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளாய்வு செய்யவேண்டும் – மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை

videodeepam

நாட்டின் இரு வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு

videodeepam