deepamnews
சர்வதேசம்

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கரடியின் முக அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

நாசா அனுப்பிய orbiter மூலம் இந்த ஔிப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள குழிகளின் புகைப்படமே இதுவாகும். இதில் மேலே இரண்டு சிறிய குழிகள் காணப்படுகின்றன. அவை ஒரே நேர்கோட்டில் சரியாக உள்ளன. அவைகள் கண்கள் போல் உள்ளது. அதன் கீழ் பகுதியில் பெரிய குழி உள்ளது. இது அழகாகவும், நீளமாகவும் உள்ளது. அது வாய் மற்றும் மூக்கு பகுதி போல் உள்ளது.

இது இயற்கையாக ஏற்பட்ட குழி என்பதுடன், கரடியின் முகத்தை போல் தோன்றுகிறது. மொத்தம் 2,000 மீட்டர் அகலத்திற்கு இந்த உருவம் உள்ளது.

இது அதிநவீன கெமரா (HiRISE) மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மூக்கு பகுதியை போன்று இருப்பது ஒரு எரிமலையாக இருக்கலாம் அல்லது மண் துவாரமாக இருக்கலாம் என்றும் சுற்றித் தெரியும் வட்ட வடிவமானது எரிமலை குழம்பு அல்லது மண் சரிவாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஏற்கனவே செவ்வாய் கிரக புகைப்படங்களில் பல ஆச்சரிய விடயங்கள் இருந்தன. பெண் ஒருவர் பாறை மீது அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கியுள்ள  யேமனில் செயற்படும் ஹவுதி அமைப்பு.

videodeepam

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை மீது இரண்டாவது முறையாக தாக்குதல!

videodeepam

ஓய்வூதிய மறிசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் ஆர்ப்பாட்டம் 

videodeepam