deepamnews
இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று இலங்கை வருகிறார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

சியோலை தளமாகக் கொண்ட குளோபல் கிரீன் க்ரோத் நிறுவனத்தின் தற்போதைய தலைவராக பதவி வகிக்கும் உள்ள பான் கீ மூன், பிப்ரவரி, இலங்கையில், காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

பான் கீ மூன் தனது பயணத்தின் ஒரு கட்டமாக இலங்கை ஜனாதிபதியையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

முன்னதாக 2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளராக இலங்கைக்கு பயணம் செய்த பான் கீ மூன், இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் உடன்பாடு ஒன்றை செய்துக்கொண்டார்.

இந்த உடன்பாடுக்கு பின்னர், இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் விடயத்தில் பல்வேறு விமர்சனங்கள்  வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

13 ஆம் திருத்தம் தொடர்பில் ரணில், தினேஷ், மஹிந்த ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் – அநுரகுமார கோரிக்கை

videodeepam

உள்ளூராட்சி தேர்தலிற்கான போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்கிறார் அனுரகுமார திசநாயக்க

videodeepam

அரசுடனான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என்கிறார் இரா. சம்பந்தன் 

videodeepam