deepamnews
இலங்கை

உயர்தர பரீட்சைக் காலத்தில் மின் துண்டிப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு நிராகரிப்பு

உயர்தர பரீட்சைகளின் போது மின்சாரம் துண்டிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடக் கோரி மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் நேற்று  நிராகரித்துள்ளது.

உயர்தர பரீட்சைக் காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டிருந்தும், தொடர்ச்சியாக மின்சாரத்தை துண்டித்து நீதிமன்றத்தை அவமதித்த இலங்கை மின்சார சபை தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தது.

மின்சார சபையின் தலைவர் என்பவர் ஒரு நபர் எனவும், குறித்த நபருக்கு மின்வெட்டிற்கான முழுமையான பொறுப்பை ஏற்க  முடியாது எனவும் காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய குழாம் தெரிவித்துள்ளது.

இதனால், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கட்டணமின்றி நிராகரிப்பதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.

இதனிடையே, உயர்தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் எவ்விதத்திலும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிடுமாறு கோரி, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்காது மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று  நிராகரித்தது.

ஆணைக்குழுவின் முறையான அனுமதி பெறாமல், அதன் தலைவர் தமது நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக  நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இலங்கை மின்சார சபையை செயற்பாட்டில் வைத்திருக்க அதன் தலைவர் முயற்சிப்பது தெளிவாவதாக சோபித ராஜகருணா, தம்மிக்க கனேபொல உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றைய காலநிலை மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை.

videodeepam

யாழ். முதல்வர் தெரிவு குறித்து சிறீதரன் எம்.பி கருத்து

videodeepam

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்.

videodeepam