ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நீக்குவதற்கு கட்சியின் நிறைவேற்றதிகார சபை தீர்மானித்துள்ளது.
கடந்த வாரம் கூடிய நிறைவேற்றதிகார சபைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
புதிய தவிசாளர் பதவிக்கு சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற யோசனையும் சிவில் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதனை தவிர, ஏனைய கட்சிகளில் இணைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏனைய உறுப்பினர்களையும் கட்சியில் இதுவரை வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.