deepamnews
இலங்கை

தபால் வாக்குச்சீட்டுகளை 21 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பாதுகாப்புப் பொதிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்திற்குள் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளூடாக வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் உள்ளிட்ட ஏனைய அச்சிடும் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு இன்று  கடிதமொன்று அனுப்பப்படவுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

சரத் வீரசேகரவுக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது!

videodeepam

மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் திடீர் சந்திப்பு

videodeepam

பாவனையாளர் அலுவல்கள் உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகிறார்களா? – அரச அதிபர் கண்காணிக்க வேண்டும்.

videodeepam