ஹைதராபாத்தில் உள்ள மெக்டொனால்டில் 8 வயது சிறுவனின் இடுப்புக்கு அருகில் எலி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவகத்தில் பெற்றோருடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த எட்டு வயது சிறுவனை எலி கடித்த சம்பவம் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
சிறுவனின் தந்தை சாவியோ ஹென்ரிக்ஸ் ட்விட்டரில் இவ் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், மேலும் குறித்த மெக்டொனால்டு விற்பனை நிலையத்திற்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்தார்.
மேலும் அவர் எலியை “சிறிய நாய்க்குட்டியின்” அளவு என்று விவரித்தார். தானும் தனது மனைவியும் அவர்களது மகனும் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, எலி கழிவறையில் இருந்து வெளிப்பட்டு நேரடியாக தனது மகன் டுவைன் ஹென்ரிக்ஸ் நோக்கி குதித்ததாக அவர் கூறினார்.
அந்தக் காட்சியில், ஒரு எலி குடும்பம் அமர்ந்திருந்த மேஜைக்கு அடியில் ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறது. மேலும், அது 8 வயது சிறுவனின் ஷார்ட்ஸ் மீது பாய்ந்து சென்று அவனது இடுப்புக்கு அருகில் கடித்தது. பின்னர் தந்தை தனது மகனை தன்னிடம் இழுத்து, அவரது ஷார்ட்ஸின் வெளியில் இருந்து எலியை பிடித்து வெளியே எறிந்தார். சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு உரிய தடுப்பூசியை பெற்றுக்கொண்டான்.
எனவே இக் காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
RODENT ATTACK ON A CHILD in the McDonald’s restaurent Ground Floor, SPG Hotel, Kompally, Hyderabad, Telangana 500096.@McDonalds @mcdonaldsindia @consumercourtin @PiyushGoyalOffc @director_food @AFCGHMC @fooddeptgoi @TOIIndiaNews @TOIHyderabad @ABPNews @ndtv @ChildWelfareGov pic.twitter.com/wrjeQgAiBh
— Savio H (@SHenrixs) March 10, 2023