deepamnews
இலங்கை

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலாளரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலில் தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பேணுவதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக, துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் தொடர்புடைய சேவைகள் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருந்தார்.

Related posts

வியட்நாம் முகாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது

videodeepam

11 ஆயிரம் நுண்கடன் நிதி நிறுவனங்களில் ஐந்து மாத்திரமே பதிவுசெய்யப்பட்டுள்ளன  – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு,

videodeepam

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஊடகங்களைத் தொட அனுமதி வழங்க கூடாது – அனுர

videodeepam