deepamnews
இலங்கை

பாடசாலைகளில் இன்றைய தினம் நடைபெறவிருந்த பரீட்சைகளை அனைத்தும் ஒத்திவைப்பு

பாடசாலைகளில் வருட இறுதிப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவிருந்த பரீட்சைகளை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களினால் இன்றய தினம் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தீர்மானங்கள் அனைத்து பிராந்திய மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக  கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி மேல்மாகாணத்தில் 9ம் தரம் தொடர்பில் நடைபெறவிருந்த கணிதம், சிங்களம் மற்றும் தமிழ் பாடங்கள் தொடர்பான பரீட்சைகள் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளன.

மேலும், 10 மற்றும் 11ம் வகுப்புகளில் நடைபெற இருந்த பாடங்கள் தொடர்பான தேர்வுகள் வரும் 22ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய கல்வி அலுவலகங்கள் அறிவித்துள்ளன.

அதேபோன்று, தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பாவும், அந்த மாகாணத்தில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இன்று நடைபெறவிருந்த பாடங்கள் மார்ச் 20ஆம் தேதியும், 20ஆம் தேதிக்குத் திட்டமிடப்பட்ட பாடங்கள் 23ஆம் தேதியும் நடைபெறும் என்றும் ஏனைய நாட்களில் தவணைப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார்.

Related posts

பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொண்ட தலைவர் நானே –  மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு

videodeepam

சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் நிறைவு – பல பகுதிகளில் நினைவேந்தல்கள்  

videodeepam

வேகமாகப் பரவி வரும் புதிய வைரஸ் – பெரும் அச்சுறுத்தல்

videodeepam