deepamnews
இலங்கை

அரசாங்கத்தை போராட்டங்களினால் வீழ்த்த முடியாது என்கிறார் எஸ்.எம்.சந்திரசேன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை போராட்டங்களினால் வீழ்த்த முடியாது எனவும் சகல போராட்டங்களையும் எதிர்கொள்ள தயார் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, தொழிற்சங்கத்தினர் நாட்டுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என தெரிவித்தார்.

ஒட்டுமொத்த மக்களும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் தமக்கான கொடுப்பனவுகள் முழுமையாக கிடைக்கப் பெற வேண்டும், வரி விதிக்க கூடாது என்று சுயநலமான கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கத்தினர் பணி புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள் என எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் போராடி நாட்டை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கிய தரப்பினர் தான் தற்போது தொழிற்சங்க போராட்டத்தில் ஈடபடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி –  உலக வங்கி தீர்மானம்

videodeepam

மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

videodeepam

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் வடமாகாணத்தில் வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான  அவசர நடவடிக்கைகள் ஆளுநரால் முன்னெடுப்பு.

videodeepam