deepamnews
இந்தியா

நரேந்திர மோடி குறித்த கருத்துகளை நோபல் குழுவின் துணைத்தலைவர் மறுப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து தாம் கூறியதாக ட்விட்டரில் வெளியான கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவை என நோபல் குழுவின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்றும், அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக அவர் இருப்பதாகவும் நோபல் குழுவின் துணைத்தலைவர் கூறியதாக தகவல் வெளியானது.

தாம் மோடியின் மிக பெரிய ரசிகர் என்றும், பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருவதாகவும் ஆஸ்லே டோஜே கூறியதாக தகவல் வெளியிடப்பட்டது.

அத்துடன், பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரலாற்று தருணமாக இருக்கும் என்றும் அவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த செய்தியை நோபல் குழுவின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே மறுத்துள்ளார். பிரதமர் மோடி குறித்து தாம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

ஒரு போலி செய்தி ட்வீட் அனுப்பப்பட்டிருகிறது. அதை நாம் போலி செய்தியாக கருதவேண்டும். அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம்.

அந்த ட்வீட்டில் இருந்த தகவல்களை தாம் திட்டவட்டமாக மறுப்பதாக நோபல் குழுவின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.

Related posts

திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்படும் என்ற யூகங்கள் பொய்யானது என்கிறார்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

videodeepam

பொலிஸ் அதிகாரியால் சுடப்பட்ட ஒடிசா அமைச்சர் சிகிச்சைப் பலனின்றி மரணம்

videodeepam

தமிழகத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு – பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை

videodeepam