deepamnews
இலங்கை

இலங்கைக்கான நிதி உதவிக்கு நாணய நிதியம் அனுமதி: ஜனாதிபதி இன்று விசேட உரை

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கான நிதி உதவிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, இலங்கைக்கான 2.9 பில்லியன் பிணை எடுப்பு கடனுதவி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இதன்போதே, இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை தனது டுவிட்டர் பதிவில்  உறுதி செய்துள்ளார்.

இதற்கமைய எங்களிற்கான ஈ.எவ்.எவ். வை சர்வதேச நாணயநிதியம் அங்கீகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது நீண்ட பயணம், ஆனால் அனைவரினதும் கடினமான உழைப்பு அர்ப்பணிப்பு காரணமாக நாங்கள் சிறந்த நாட்களை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான நோக்கத்தை அடைவதற்கு பாடுபட்ட ஜனாதிபதிக்கும் இலங்கைக்கு கடன்வழங்கிய அனைவருக்கும் நன்றி என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விகர்மசிங்க இன்று  (21) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடன் வழங்குநர்களின் கூட்டத்தை டிசம்பரில் நடத்த ஜப்பான் திட்டம்

videodeepam

வெப்பமான காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

videodeepam

குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்து – காணாமல் போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்பு

videodeepam