deepamnews
இலங்கை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு சொந்தமான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கிரிமினல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் நேற்று  (21) உத்தரவிட்டுள்ளது.

நுகேகொடை நாலந்தராமாதிபதி வணக்கத்திற்குரிய தினியாவல பாலித தேரரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதி செயலாளரின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த எழுத்துமூல உரைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று (21) அழைக்கப்பட்ட போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் திறந்த நீதிமன்றில் ஆஜராகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related posts

கிளிநொச்சி மாவட்ட கால்நடை வளர்ப்பு சங்கத்தின் ஊடக சந்திப்பு!

videodeepam

வரிக் கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன

videodeepam

விவசாயிகளுக்காக மீள அறவிடப்படாத 20 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்க திட்டம்

videodeepam