பக்டீரியாவால் ஏற்படும் லிஸ்டீரியோசிஸ் என்ற நோயானது, நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பிரதான தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், இலங்கையில் லிஸ்டீரியோசிஸ் நோய் இன்னும் பரவவில்லை. எவ்வாறாயினும், இந்த நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் லிஸ்டீரியா குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும் நிபுணர் குறிப்பிட்டார்.
அண்மையில், பல்வேறு ஊடகங்களும் சமூக ஊடகங்களும் லிஸ்டீரியா நோயைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட விடயங்களை வெளியிட்டன.
தவிர, இலங்கையில் நோயாளிகள் எவரும் இருப்பதாகத் தகவல் இல்லை. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில், எந்த அறிக்கையும் லிஸ்டீரியா என சந்தேகிக்கும் நோயாளிகள் கண்டறியப்படவில்லை. அதனால்தான் லிஸ்டீரியா பரவும் அபாயம் இல்லை என்று கூறப்படுகிறது.
நாங்கள் பரிசோதித்த உணவு மற்றும் நீர் மாதிரிகளில் லிஸ்டீரிய கண்டறியப்படவில்லை.
லிஸ்டீரியா என்ற பக்டீரியா விலங்குகள் மத்தியிலும் பரவுகிறது. அது போன்ற ஏதாவது உணவு மூலமும் பரவுகிறது.
வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி மற்றும் உடல் வலி போன்றவை லிஸ்டீரியாவின் அறிகுறிகளாகும். எனினும், ஏற்படும் எல்லா வயிற்று வலியும் லிஸ்டீரியா அல்ல.
இருப்பினும், தாம் உட்கொள்ளும் உணவு மற்றும் நீர் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.