deepamnews
இலங்கை

இலங்கையர்கள் 10,000 டொலருக்கான இந்திய ரூபாயை வைத்திருக்கலாம் 

இலங்கையர்கள் 10,000 டொலர் மதிப்புள்ள இந்திய ரூபாயை (INR) வைத்திருக்க அனுமதிக்கும் புதிய ஒழுங்குமுறைக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய ரூபாயை வெளிநாட்டு நாணயமாக அனுமதிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், அமெரிக்க டொலரில் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கிகளின் கடல்கடந்த வங்கி அலகுகள் (OBU) வதிவிடமில்லாதவர்களிடம் இருந்தும் சேமிப்பு மற்றும் வைப்புகளை ஏற்க அனுமதிக்கப்பட்டுள்ளமை மற்றொரு முக்கியமான அம்சமாகும் என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related posts

எரிபொருள் நிறுவனங்கள் தற்போதைய விலைக்குக் குறைவாக எரிபொருளை விநியோகிக்க அனுமதி

videodeepam

நிதியை விடுவிக்கக் கோரி நிதி அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

videodeepam

முக்கியமான திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு.

videodeepam