deepamnews
இலங்கை

நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் மாவட்ட அபிவிருத்தி சபை உருவாக்கப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தல்

வடக்கு பிரச்சினைகளை தீவிரப்படுத்தாமல் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வடக்கு அரசியல்வாதிகள் அவதானம் செலுத்த வேண்டும் என சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள்,கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாணங்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினையாக காணப்படுகிறது.
மாகாணங்களுக்கு கீழான நிருவன கட்டமைப்பில் அதிகார பகிர்வு வழங்க முடியும்.மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை ஊடாக அதிகாரத்தை பகிர முடியும்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை கொண்டு வந்தார்,அதற்கு வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.அக்காலப்பகுதியில் தான் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு தீ வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் எஸ்.டப்ள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் காலத்தில் சிங்கள மொழி மாத்திரம் அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சமூக கட்டமைப்பில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன இவ்வாறான நிலையில் பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பண்டா- செல்வா ஒப்பந்தத்திற்கு மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவித்து வீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட போது எஸ்.டப்ள்யூ,ஆர்.டி. பண்டாரநாயக்க கைச்சாத்திட்ட பண்டா- செல்வா ஒப்பந்த பிரதிகளை போராட்டத்தில் ஈடுப்பட்ட மதகுருமார்கள் முன் தீயிட்டு இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்து செல்வதில்லை என குறிப்பிட்டார்.

இதன்பின்னர் டட்லி –செல்வா ஒப்பந்தம் ஊடாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது ஆனால் தீர்வு எட்டப்படவில்லை.
ஜே.ஆர் ஜயவர்தன அறிமுகப்படுத்திய மாவட்ட அபிவிருத்தி சபை ஊடாக மாவட்டங்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக அதிகாரம் வழங்ப்பட வேண்டும்.இந்த முறைமையினால் அரசாங்கத்திற்கு மேலதிக நிதி செலவாகாது  என்று தெரிவித்துள்ளார்.

Related posts

மோடியை ஒன்றாகச் சேர்ந்து சந்திக்க முயல்வோம் வாருங்கள்…! தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு.

videodeepam

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக பசிலும் நாமலும்  முன்மொழிவு

videodeepam

இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களை வருத்தமடையச் செய்துள்ளது-காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

videodeepam