இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 221 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீனவர்களின் தொடர் கைது நடவடிக்கையானது கடற்றொழிலை மாத்திரம் நம்பியுள்ள தமிழக மீனவ சமூகத்திற்கு கடும் மன அழுதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மீனவ சமூகத்திற்கு அரசின் ஆதரவு தேவைப்படுவதாகவும் முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
தமிழக மீனவர்களின் 105 படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.