deepamnews
இலங்கை

மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவத் தயார் – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு 

மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள், மாவட்டத்தின், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன், ஏனைய நிறுவனங்கள் அடங்கியதே மாவட்ட அபிவிருத்திச் சபையாகும்.

மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவுவதன் மூலம் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்றும், அதன்மூலம் பாரியளவான நிதியை சேமிக்க முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் வாக்கெடுப்பு

videodeepam

உற்பத்தி திறனற்ற 17 அரச நிறுவனங்களை மூட யோசனை முன்வைப்பு

videodeepam

குற்றப்பத்திரத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் – அமைச்சர் கஞ்சனவுக்கு ஜனக்க ரத்னாயக்க பதில்

videodeepam