deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மேலும் தாமதம் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திகதிகளில் நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி ஆகிய தினங்களில் நடத்தப்படவிருந்த தபால் மூல வாக்களிப்பை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது அரசியல் கட்சிகளின் செயலாளர்களால் நான்கு  அம்ச யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என்பதால், உறுதியான திகதி ஒன்றை அறிவித்து தேர்தலை ஒத்திவைத்தல், வாக்களிப்பிற்கு தேவையான வசதிகளையும் பின்புலத்தையும் உறுதி செய்துகொண்டதன் பின்னர் தேர்தல் தினத்தை அறிவித்தல் என்பன அந்த யோசனைகளில் அடங்கும்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  சட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால், தேர்தலை  ஒத்திவைக்க முடியாது எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் இரதோற்சவ திருவிழா.

videodeepam

சர்வதேச மாற்று வலுவுடையோர் தின நிகழ்வு பளை மத்திய கல்லூரியில் மிகச் சிறப்பாக இடம்பெற்றிருந்தது!

videodeepam

கிளிநொச்சியில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் – பொலிஸார் அசமந்தம்

videodeepam