deepamnews
இலங்கை

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் இரதோற்சவ திருவிழா.

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பமான கொடித்தம்ப பூசையைத் தொடர்ந்து 09.00 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து துர்க்கையம்பாள் சமேதராக உள்வீதி ஊடாக வலம்வந்து, வெளிவீதியில் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

பெருந்திரளான பக்தர்களுடன் இடம்பெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா 29.08.2023 அன்று நடைபெற்று, மாலைகொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும். இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்து பக்தர்கள் கலந்துகொண்டன

Related posts

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு – கரிநாளாக பிரகடனம்

videodeepam

பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

videodeepam

தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது – சந்திரிகா

videodeepam