deepamnews
இலங்கை

8 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நாளை நலன்புரி கொடுப்பனவு.

விபரம் சரிபார்க்கப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்குரிய, ஜூலை மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு நாளைய தினம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணியை நலன்புரி நன்மைகள் சபை முன்னெடுத்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தமது சமூக ஊடக பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

தகவல்களை விரைவாக சரிபார்த்த பின்னர், மீதமுள்ள பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பிலான கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது நிறைவடைந்தவுடன் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் வைப்பிலிடப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாணந்துறையில் பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

videodeepam

 IMF இன்  நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை விவாதம் இம்மாத இறுதியில்

videodeepam

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதி

videodeepam