deepamnews
இலங்கை

பெற்றோலிய கூட்டுத்தாபன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டவர்களை சந்தித்த  மஹிந்த ராஜபக்ஷ

 எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க தலைவர்கள் உட்பட இருபது பேரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.

விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது

இதேவேளை, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பெற்றோலிய தொழிற்சங்க தலைவர்கள் ஐவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கலந்துரையாடல் ஒன்றையும் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தொழிற்சங்க தலைவர்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரிடம் வினவியபோது ஹிரு நியூஸ் தெரிவித்துள்ளது.

Related posts

இந்தியாவிற்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் இணையலாம் – ராகுல் காந்தி எச்சரிக்கை

videodeepam

அதிக விலைக்கு பொருட்களை விற்கும் கடைகளை கண்டுபிடிக்க விசேட சுற்றிவளைப்பு

videodeepam

சிறிய குற்றங்களுக்கு ஆளாகுபவர்களை வீட்டுக்காவலில் வைக்கும்  வகையில் சட்டம் அமைக்க நடவடிக்கை – நீதி அமைச்சர் திட்டம்

videodeepam