பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது ஒத்திவைக்கப்படுவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் இறுதி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.
உரிய பங்குதாரர்களுடன் போதிய ஆலோசனைகள் இன்றி இந்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால், அதன் முன்வைப்பை ஒத்திவைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.