தேவாலயங்களை அண்மித்து பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ்மா அதிபரால் இந்த விடயம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை காணப்படுமாக இருந்தால், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை அழைக்கும் இயலுமை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் தேவைகள் காணப்படுமானால், இராணுவ அதிகாரிகளையும் அழைக்க முடியும் எனவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.