deepamnews
இலங்கை

தென்கொரிய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜியோங் வூன்ஜின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பில், தென்கொரிய தூதுவரின் சேவைக் காலம் முடிவடைவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் ஜனாதிபதிக்கும் தென்கொரிய தூதுவருக்கும் இடையில் சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், ஜொங் வுன்ஜிங் தனது சேவைக் காலத்தில் இந்த நாட்டிற்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதியின் நன்றிகள் கிடைக்கப்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜொங் வூங்ஜிங் இலங்கைக்கான தென் கொரிய தூதுவராக நியமிக்கப்பட்ட பின்னர் 02 ஜூலை 2020 அன்று இலங்கை வந்தடைந்தார்.

Related posts

விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை

videodeepam

நந்தலால் வீரசிங்கவின் கருத்து திரிபுபடுத்தப்படுகிறது:  மத்திய வங்கி அறிக்கை

videodeepam

தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த போல் தினகரன் யாரையும் மதமாற்றுவதற்கு இங்கு வரவில்லலை – சாம் ராஜசூரியர்

videodeepam