deepamnews
சர்வதேசம்

கூரைத் தகடு மோசடியில் சிக்கிய உகாண்டா அமைச்சருக்கு சிறைத்தண்டனை

கூரைத் தகடு மோசடியில் சிக்கிய உகாண்டா அமைச்சர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கரமோஜா (Karamoja) விவகார அமைச்சர் Mary Goretti Kitutu என்பரின் நெருங்கிய உறவினர்கள் மூவர் கூரைத் தகடுகளை விற்பனை செய்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு கரமோஜா பகுதியில் உள்ள ஏழை மக்களுக்காக, கரமோஜா சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருந்த கூரைத் தகடுகளே  விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் அலுவலகம் என அவற்றில் பெயர் பொதிக்கப்பட்டிருந்ததால், குறித்த மூவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதன் பின்னர், அமைச்சர் Mary Goretti Kitutu-விற்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கு விசாரணையின் போது, அமைச்சர்  Mary Goretti Kitutu தனது தவறை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன், தண்டனைக்காலம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

Related posts

ரஷ்ய துணை ராணுவப் படையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் – அமெரிக்கா தகவல்

videodeepam

பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ரிஷி சுனக்

videodeepam

10 தடவைகளுக்கு மேல் அமெரிக்க பலூன்கள் அத்துமீறின – சீனா குற்றச்சாட்டு

videodeepam