அண்மைக்காலமாக பல வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகளால் வீதியில் செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்ய முடிவதில்லை.
இதனைக் கருத்திற்கொண்டு, குறிப்பாக பெற்றோர்கள் பாடசாலை மாணவர்களிடம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த விடுமுறை காலத்தில் மது அருந்திவிட்டோ மிக வேகமாகவோ வாகனம் செலுத்த வேண்டாம்.
மதுபோதையில் வாகனம் செலுத்தினால் உங்களுக்கும், வீதியில் செல்பவர்களுக்கும், வாகனத்தில் உள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும்.
விபத்து ஏற்பட்டால், உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படலாம். இந்த பண்டிகை காலத்தில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுங்கள்.
ஆனால் வேடிக்கையானது கடைசியில் சோகமாக மாறக்கூடாது என்பதை நினைவூட்டுகிறேன்.
வீதியில் பயணிக்கும் போது, கவனமாக பயணிக்க வேண்டும். விபத்துகளைத் தவிர்க்க அவதான இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.