deepamnews
சர்வதேசம்

சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார் –  மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு

தாய்வானிற்கு அருகில் மூன்றுநாள் போர் ஒத்திகையை மேற்கொண்ட பின்னர் தாம் மோதலொன்றிற்கு தயாராக உள்ளதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது.

தாய்வான் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் பின்னர் தாய்வானை சுற்றிவளைக்கும் போர் ஒத்திகையில் ஈடுபட்ட சீன இராணுவம் போர் செய்வதற்கு தயார் என தெரிவித்துள்ளது.

படையினர் எந்நேரிடமும் போரிட தயாராக உள்ளனர் மேலும் எந்தவகையான தாய்வானின் சுதந்திர முயற்சியையும் வெளிநாட்டு தலையீடுகளையும் முறியடிப்பதற்காக எவ்வேளையிலும் அவர்களால் போரிட முடியும் என சீன இராணுவம் தெரிவித்துள்ளது.

கூட்டு வாள் என்ற பெயரில் சீன இராணுவம் இந்த ஒத்திகையை முன்னெடுத்திருந்தது. தாய்வானிற்கான எச்சரிக்கை என இந்த ஒத்திகையை முன்னதாக சீன இராணுவம் வர்ணித்திருந்தது.

Related posts

சூடானில் இடம்பெறும் மோதல்களால்  413 பேர் பலி, 3,551 பேர் காயம் –  உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு  

videodeepam

சிரியாவில் குண்டுத்தாக்குதல் – 6 பேர் பலி, 45 பேர் காயம்,

videodeepam

இந்தோனேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள 180 க்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள்

videodeepam